Element of Surprise

Author
Margaret Wheatley
17 words, 21K views, 34 comments

Image of the Weekஆச்சரியத்தின் கூறு
மார்கரெட் வீட்லி


கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் வாழ்க்கையின் அமைப்பு, நாம் யாராக இருக்க முயல்கிறோமோ அதை ஆதரிப்பதில்லை. வாழ்க்கை நம்மை அதனோடு விளையாடி அதன் போக்கில் கண்டறிய அழைக்கிறது. ஆது நம்மோடு ஆச்சரியங்கள் நிறைந்த விதங்களில் வேலை செய்ய விரும்புகிறது. இந்த ஆச்சரியங்களை ஒதுக்காமல், இந்த புதிரான நிகழ்வுகளுடன் கூடி வேலை செய்தோமானால், நம் வாழ்வு சுவாரஸ்யம் நிரம்பியதாக இருக்கும். நாமும் பல புதிய திறன்களை பெறுவோம்.

இந்த வியப்புகள் நிறைந்த உலகுடன் நாம் எவ்வாறு ஈடுபடுவது? புதியதாக பார்வைக்கு வந்தவற்றை காண நிலையான விழிப்புணர்வும், கவனமும் தேவை. இது வரை நாம் காணத் தவறிய பொருட்களையும், முக்கியம் என கருதாதவற்றையும், நாம் நினைத்துப் பார்க்காத தாக்கங்களையும், கணிக்க முடியாத நடத்தைகளையும் கவனிக்க வேண்டும்.

வெளிப்பாடுகள் நிரம்பிய உலகம் நம் அனேக மானுட சக்திகளையும், நம் ப்ரக்ஞையையும் ஈடுபடுத்த அழைக்கிறது. இந்த தருணத்தில் என்ன மலர்கிறதோ அதை கவனித்து, அறிந்து, அந்த அறிவுடன் என்ன செய்ய வேண்டும் என்று நம்மை கேட்க வைக்க்கிறது.

இந்த உலகம் நம்மை விழிப்புணர்வுடன் கூடிய பங்கேற்பாளர்களாக வரவேற்று, பலப் பல புதிய கண்டறிதல்களால் ஆச்சரியப் பட வைக்கிறது. அனைத்துமே ஆச்சரியத்துக்கு உரியவை என்பதை உணர்தலே அனைத்துமே அன்பளிப்பாக கிடைத்தவை என்பதை புரிந்து கொள்வதற்கு முதல் படி என்று பாதிரியார் டேவிட் கூறுகிறார்.

இந்த உலகம் தன்னால் கொடுப்பவற்றுடன் ஒப்பிடும் போது நம்முடைய திட்டங்கள் மிகச் சிறியவை.

கேள்வி: ஆச்சரியங்களை நீங்கள் அன்பளிப்பாக கருதிய ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Add Your Reflection

34 Past Reflections