The Real Addiction

Author
S.N. Goenka
20 words, 9K views, 1 comments

Image of the Weekஉண்மையான போதை
- S N கோயங்கா


நாம் போதையைப் பற்றி பேசும்பொழுது அது மது மற்றூம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது பற்றி மட்டும் அல்ல. கட்டிலடங்கா உணர்ச்சிகளுக்கும், கோபத்துக்கும், பயத்துக்கும், கர்வத்திற்கும் அடிமையாவது கூட போதைதான். இவை எல்லாமே நம் கசடுகளுக்கு நாம் அடிமையாதலே. இதை அறிவு சார்ந்த நிலையில் நன்றாக புரிந்து கொள்கிறோம். "கோபம் எனக்கு நலன் விளைவிக்காது. ஆது ஆபத்தானது". இருந்தாலும் நாம் கோபத்திற்கு அடிமையாகி அதனை மறுபடியும் மறுபடியும் உருவாக்குகிறோம். கோபம் நீங்கியதும் "அடடா..நான் மறுபடியும் கோபப்பட்டு இருக்கக் கூடாது" என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொள்கிறோம்.

இது அர்த்தம் இல்லாதது. அடுத்த முறை கோபத்தைத் தூண்டும் உணர்ச்சி மேலிடும்போது மறுபடியும் கோபம் கொள்கிறோம். நம் மனதின் வழக்கமான நடத்தை முறையின் ஆழத்தில் இருந்து நாம் வேலை செய்யாத காரணத்தால் அதை விட்டு வெளியே வராமல் இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட ரசாயனம் உடம்பில் ஓடத் தொடங்கியதால் கோபம் எனும் உணர்வு பொங்க ஆரம்பிக்கிறது, மனமும், உடலும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு செயலாற்றும் பொழுது கோபம் பன்மடங்காகத் தொடங்குகிறது.

நம்மை அடிமையாக வைத்திருப்பது ஆசையாகவோ, அருவருப்பாகவோ, வெறுப்பாகவோ, உணர்ச்சிக் குவியலாகவோ, பயமாகவோ இருக்கலாம். உண்மையான போதை ரசாயனங்கள் சுரப்பதால் வெளிப்படும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிக்கே. இந்தப் பொருள் நம் மனதளவில் ஒரு எதிர்ச்செயலை விளைவிக்கிறது. இந்த எதிர் வினை மறுபடியும் ரசாயனப் பொருளாக மாறிப் படிகிறது. நாம் போதை என்று கூறுவது, இந்த உணர்ச்சிக்கும், ரசாயன ஓட்டதிற்கும் அடிமையாக இருப்பதையே.

கரு / கேள்வி: கோபம் வருகிறது என்று தெரிந்து, அதற்கு அடிமை ஆகாமல் நீங்கள் தப்பித்த ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Add Your Reflection

1 Past Reflections