The River

Author
Herman Hesse
15 words, 19K views, 1 comments

Image of the Weekநதி
- ஹெர்மன் ஹெஸ்


நான் ஒரு படகோட்டி மட்டுமே. எனது பணி மக்களை இந்த ஆற்றை கடந்து அழைத்து செல்வது. நான் ஆயிரக்கணக்கான மக்களை அழைத்து சென்றிருக்கிறேன். அவர்களில் அனேகருக்கு இந்த ஆறு அவர்களது பயணத்தில் ஒரு தடை மட்டுமே. பணம்,வியாபாரம், திருமணம், புனித யாத்திரை என்று பல காரணங்களுக்காக அவர்கள் பயணம் செய்யும்போது, இந்த நதி இடையில் வருகிறது. படகோட்டி என்பவன், இந்தத் தடையை அவர்கள் விரைவில் தாண்ட உதவி செய்பவனாக இருக்கிறான். இந்தக் கூட்டத்தின் மத்தியில், ஒரு சிலருக்கு - ஒரு நான்கைந்து பேருக்கு இந்த ஆறு ஒரு தடையாக இருந்ததில்லை. இதன் குரலைக் கேட்டு, அதை கவனித்து வந்ததால் இவர்களுக்கு இந்த நதி எனக்கு போலவே புனிதமானதாக இருக்கிறது.

காலம், சமயம், நேரம் என்பன இல்லை என்ற ரகசியத்தை நதியிடமிருந்து நீங்களும் கற்றுக் கொண்டீர்களா? நதி என்பது ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் இருக்கிறது - அது துவங்கும் இடத்தில், பெருக்கெடுத்து ஓடும் பகுதியில், நீர் வீழ்ச்சியில், படகில், அலையில், கடலில், மலையில்..இப்படி எல்லா இடங்களிலும் இருப்பது ஒரே நதிதான்., இதனால், நதிக்கு எப்போதும் நிகழ் காலம் மட்டுமே உண்மையாக இருக்கிறது..கடந்த காலம் மற்றும் வரும் காலத்தின் நிழல் அதனைத் தீண்டுவது கூட இல்லை.

கரு / கேள்வி:
நதிகளுடன் உங்களுக்கு இருக்கும் உறவைப் பற்றி பகிர்ந்து கொள்ளூங்கள்.


Add Your Reflection

1 Past Reflections