Believers in Small Graces

Author
Kent Nerbern
26 words, 82K views, 12 comments

Image of the Weekஅமைதியாகக் கடவுளைத் தேடுபவர்கள்
- கென்ட் நெர்பெர்ன்


கோவில்களுக்கு போகாமல், பலர் பார்க்கும் விதத்தில் பக்தியை காட்டாமல்,
சடங்குகள் செய்யாமல், கடவுளை அமைதியான இடங்களில் தேடுபவர்கள்
இருக்கின்றார்கள்.

இப்படிப்பட்டோர் ஒரு சூரிய அஸ்தமனத்தின் அழகில் தன்னை இழந்து நிற்கலாம்; ஒரு நல்ல இசையைக் கேட்டு அமைதியாக கண்ணீர் விடலாம்; அன்னையின் அரவணைப்பில் இருக்கும் ஒரு குழந்தையைப் பார்த்து அன்பில் மூழ்கிப் போகலாம்.

நீங்கள் சந்திக்க நேரும்பொது, இவர்கள், தனிமையில் இருப்போருக்கு ஆறுதல்
அளித்துக் கொண்டும், பசியில் வாடுவோருடன் உணவு பகிர்ந்து கொண்டும், உடல் நலன் சரி இல்லாதவரை கவனித்துக் கோண்டும் இருக்கலாம்.

கடவுள் என்ற பெயரை உபயோகிக்காமல் இவர்கள் தங்கள் உடைமைகளை கொடுக்கக் கூடும். அல்லது ஒரு சிறிய புன்னகை போன்ற செயல்கள் மட்டுமே இவர்களது அன்பின் வெளிப்பாடாக அந்த கணத்தில் இருக்கக் கூடும்.

இவர்கள் அமைதியாக கடவுளை நேசிப்பவர்கள். சாதாரணமாகத் தோன்றும் தினசரி வாழ்க்கை கூட லயமும் நயமும் நிரம்பியது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.

இவர்களது வழி ஆடம்பரங்கள் நிரம்பியது அல்ல. ஒரு போதகரோ, சாதுவோ செல்லும் வழியும் அல்ல. இவர்கள் எந்த வழியிலும் செல்வதில்லை என்று
கூட சிலர் கூறுவதுண்டு. நம்மை சூழ்ந்து உள்ள இருட்டைத் தாண்டியும் வாழ்க்கை என்பதில், சொல்லில் அடங்காத அழகும், அர்த்தமும், சந்தோஷமும் உண்டு என்பது இவர்களுக்கு நிச்சயமாக தெரிந்த உண்மை.

வாழ்வின் சின்ன சின்ன தருணங்களில் கூட கடவுளை அமைதியாகத் தேடும் இவர்களை நான் வணங்குகிறேன். எல்லாவற்றையும் என்னிடமிருந்து எடுத்து விட்டால் கூட அன்புடன் வாழ்தல் மட்டுமே அர்த்தம் உள்ள வாழ்க்கைக்கு போதுமானது என்பதை இவர்கள் நினைவூட்டுகிறார்கள்..

கேள்வி: கடவுள் என்ற சொல்லுக்கு உங்கள் அர்த்தம் என்ன?


Add Your Reflection

12 Past Reflections